கன்னியாகுமரி மாவட்ட அகில பாரத இந்து மகாசபா துணைத்தலைவர் ராஜமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், "குமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை, காப்பிகாடு பகுதிகளில் உள்ள இரு அரசு மதுபானக் கடைகளுக்கு நீரோடி காலனி, சின்னத்துரை, பூந்துறை, கொல்லங்கோடு ஆகியப் பகுதிகளில் உள்ளவர்கள் ஏராளமானோர் தினமும் வந்து நீண்ட வரிசையில் நின்று மதுபானங்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், இப்பகுதியில் நாளுக்கு நாள் காரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே புதுக்கடை, காப்பி காடு மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பைங்குளம் பகுதியில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா, பிரவுன் சுகர் படகுகளில் வைத்து விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே, அந்தப் பகுதிகளில் காவல் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருபவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நூறு நாள் வேலை திட்டத்தில் கேலிக்கூத்தான சமூக இடைவெளி!