கிருஷ்ணகிரி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் எனப் பல்வேறு வகையான அரசியல் ஆதாயங்கள் காரணமாக 30 ஆண்டுகளாக இந்தச் சாலை பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை மழை பெய்யும் பொழுதும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். சில நேரங்களில் ரயில்வே கிராசிங் சுரங்கப்பாதையில் ஆளை மூழ்கடிக்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றுவிடுகிறது.
இதனால், அதில் வரும் வாகனங்கள் பழுதாகி நின்றுவிடுகிறது. இதன் காரணமாக அடுத்தடுத்து வரும் வாகனங்கள் செல்ல இயலாமல் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், சரக்கு வாகனங்கள் செல்வதில் பெரிய சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்களும் தங்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கு இந்தச் சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டுவருகின்றனர்.
இது குறித்து ஊத்தங்கரை வட்டாட்சியர் கூறியதாவது, "இந்தச் சுரங்க மேம்பால பாதை தற்போது ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் கடந்த இரண்டு நாள்களாகப் பராமரிப்பில் ஈடுபட்டு தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். விரைவில் அப்பணியை முடித்துவிடுவார்கள்" எனத் தெரிவித்தார்.