ETV Bharat / briefs

'வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பிழைக்காது' - நீதிபதிகள் வேதனை - Provide ration items for interstate employee

சென்னை: வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பிழைக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Provide ration items for interstate employee, HC comments
தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு
author img

By

Published : Jul 9, 2020, 4:40 PM IST

தமிழ்நாட்டில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உரிய இடம், உணவு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றமும் வெளிமாநில தொழிலாளர்கள் உரிய வசதிகள் செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவுகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.பி. சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்விடம் முறையிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர், தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இலவச அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க உத்தரவிட்டுள்ளது என்றும், அதேபோல ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய தொழிலாளர்கள் ஆகியோருக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். மேற்கு வங்க அரசு ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரேஷன் பொருள்களை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயத் தொழிலுக்கு கூட வெளிமாநில தொழிலாளர்களை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழல் இருப்பதாகத் தெரிவித்தனர். வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பிழைக்காது என்ற சூழ்நிலை உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

பல நிறுவனங்கள் வெளிமாநில தொழிலாளர்கள் நம்பித்தான் செயல்படுவதாகவும், அவர்கள் இல்லாததால் தற்போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் கூறினர். தொடர்ந்து ரேஷன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு, ரேஷன் பொருள்கள் வழங்க முடியுமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஜூலை 13ஆம் தேதி பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.