கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு காரணமாக அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் பூட்டப்பட்டிருப்பதால், பக்தர்கள் இன்றி சம்பிரதாய பூஜைகள் மட்டுமே நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களை திறந்து வழிபாடுக்கு அனுமதிக்க கோரி இன்று (ஜூன்10) திருச்சி பாலக்கரை பிரபாத் சந்திப்பு அருகே த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.