ETV Bharat / briefs

பட்டப்படிப்புகள் செமஸ்டர் தேர்வு ரத்து வழக்கு - பல்கலைக்கழக மானியக் குழு பதிலளிக்க உத்தரவு - மத்திய மாநில அரசுகள்

சென்னை: தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துப் பட்டப்படிப்புக்களின் இறுதிப்பருவத் தேர்வை ரத்துசெய்யக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகளும் பல்கலைக்கழக மானியக் குழுவும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Postponement of case
Postponement of case
author img

By

Published : Jul 20, 2020, 12:26 PM IST

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்துசெய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகள் உள்ளிட்ட அனைத்துப் பட்டப் படிப்புக்களுக்கான இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்துசெய்யக் கோரி கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அம்மனுவில், “பள்ளி, கல்லூரிகள் கரோனா தனிமைப்படுத்தல் மையமாகத் தறகாலிகமாக மாற்றப்பட்டுள்ளதால், இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கரோனா பாதிப்பு செப்டம்பர்தான் குறையும் எனவும், பள்ளி, கல்லூரிகள் 2021ஆம் ஆண்டு ஜனவரிதான் திறக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், ஜனவரியில் தேர்வு எழுதினால் அதன் முடிவுகள் வெளியாக மார்ச் மாதமாகி விடும் என்பதால், இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதேசமயம் தேர்வு நடத்துவது தொடர்பாகப் பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதாலும், தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்பதாலும், இறுதிப்பருவத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். ஹால்டிக்கெட் பெற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இறுதிப்பருவத் தேர்வு நடத்த தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளும், பல்கலைக்கழக மானியக் குழுவும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.