ETV Bharat / briefs

'அரசு மருத்துவமனைகளில் தரமான உணவு வழங்கப்படுகிறது' - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்!

புதுச்சேரி: அரசு கரோனா மருத்துவமனைகளில் தரமான உணவு வழங்கப்படுவதாக புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

'மருத்துவனைகளில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறது'- அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்!
Pondicherry minister speak about corona
author img

By

Published : Jul 4, 2020, 5:21 PM IST

அரசு கரோனா மருத்துவமனைகளில் தரமான உணவு வழங்கப்படுவதாக புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "புதுச்சேரியில் ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 76 பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். கடந்த 105 நாள்களில் இதுவே அதிகபட்சமாகும். இந்நிலையில், புதுச்சேரி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் கரோனாவால் உயிரிழந்தார். இதன் மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

தற்போது புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளிலும் நடமாடும் அவசர ஊரதி மூலம் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காரைக்காலிலும், கரோனா பரிசோதனைக்காக நடமாடும் அவசர ஊரதி வாகனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு கரோனா மருத்துவமனைகள் அனைத்தும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் விரைவில் வாங்கப்பட உள்ளன. முன்பை விட தற்போது புதுச்சேரியில் கரோனா மருத்துவ சோதனை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.