ETV Bharat / briefs

மின்வாரிய உத்தரவை ரத்துசெய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு! - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மின்சார வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்துசெய்யக்கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Chennai highcourt
Theb
author img

By

Published : Jun 11, 2020, 6:24 PM IST

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், மின்சாரக் கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட்டு, முந்தைய மாதக் கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்துவிட்டு, மீதித் தொகைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், "முன்பு பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் யூனிட் அளவில் கணக்கிடாமல், முந்தையக் கட்டணத்தின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிப்பதன் மூலம், 12 விழுக்காடு முதல் 14 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மின்சார வாரியத்தின் அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி பில்லாகவும், மீதமுள்ள யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான பில்லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.

நான்கு மாதங்களுக்குச் சேர்த்து கட்டணம் நிர்ணயிப்பதால், 500 யூனிட்களுக்கு மேல் மின் பயன்பாடு வரும்போது, அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதனால் 500 யூனிட்களுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 96 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டி வரும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.