ETV Bharat / briefs

கரோனா அறிகுறிகள் இல்லாதோர் வெளியே தேவையில்லாமல் செல்லக்கூடாது!

author img

By

Published : Sep 10, 2020, 3:50 PM IST

புதுச்சேரி: கரோனா பரிசோதனை முடிவில் நோய் அறிகுறிகள் இல்லாதோர் நோய் வராது என நினைத்து தேவையில்லாமல் வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா அறிகுறிகள் இல்லாதோர் வெளியே தேவையில்லாமல் செல்லக்கூடாது

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், "புதுச்சேரியில் நேற்று மட்டும் 2,264 பேருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் 452 நபருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், 422 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை புதுச்சேரியில் மொத்தம் 18 ஆயிரத்து 536 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகள் எடுக்கப்பட்டுவந்து நிலையில் தற்போது நாளொன்றுக்கு 2,500 பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பரிசோதனை முடிவுகளில் கரோனா அறிகுறி இல்லாதவர்கள் நோய் வராது என நினைத்து தேவையில்லாமல் வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.