கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரசித்திப்பெற்ற ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு தெய்வ வழிபாடு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆத்தூர் சடையாண்டி கோயிலில் இன்று(ஜூலை 20) தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஆனால் தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆத்தூர் சடையாண்டி கோயிலுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து கோயிலுக்கு செல்லும் மூன்று கிமீ தூரத்திற்கு முன்பே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் தடுத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கோயில் வளாகம் இன்று(ஜூலை 20) வெறிச்சோடி காணப்பட்டது.