ETV Bharat / briefs

தகுந்த இடைவெளியின்றி கோயிலில் குவியும் மக்கள்! - கரோனா பாதிப்பு காலத்தில் கோயிலில் குவிந்த மக்கள்

நாமக்கல்: தகுந்த இடைவெளியின்றி கோயில் முன்பு திரண்ட பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

தனிமனித இடைவெளியின்றி கோயிலில் குவியும் பொதுமக்கள்!
கரோனா காலத்தில் கோயிலில் குவிந்த மக்கள்
author img

By

Published : Jul 19, 2020, 1:21 AM IST

கரோனா தொற்று காரணமாக நகர் பகுதியில் உள்ள கோயில்களை திறக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் அருகில் தனியாருக்குச் சொந்தமான அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயில் முன்பு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தகுந்த இடைவெளியின்றியும், பலர் முகக்கவசம் அணியாமலும் ஒன்று கூடி பிரதோஷ வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மேலும், கோயிலின் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் கூடி அன்னதானத்தை வாங்கிச் சென்றனர். கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் காற்றில் பறக்கவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரோனா பாதிப்பு நாமக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் கோயிலில் அதிகளவு பொதுமக்கள் கூடியது கரோனா பரவும் மையமாக மாறக்கூடும் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.