ETV Bharat / briefs

அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன: ஊராட்சித் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு - ஊராட்சி மன்ற தலைவர்கள்

ராமநாதபுரம்: ஊராட்சி தலைவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Jun 23, 2020, 7:45 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் ஊராட்சிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்த தனி அலுவலர்களின் அதிகாரங்கள் மீண்டும் அந்தந்த ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும்.

ஆனால் கமுதி தாலுகாவிற்குள்பட்ட பகுதிகளில் ஊராட்சி தலைவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் டெண்டர் போன்றவை, ஊராட்சித் தலைவர்கள் மூலமாக செய்யப்படும் வேலைகள் அனைத்தும் ஊராட்சி அலுவலர்கள் மூலமாக செய்யப்பட்டு வருகின்றன. இது 1994 ஆம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் உள்ளாட்சிகளுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை பறிக்கும் விதமாக இருக்கிறது.

இதனால் தங்களின் மதிப்பும், மரியாதையும் ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீட்டெடுக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை கோருதல் மற்றும் 14 ஆவது நிதிக்குழு மானியம் உள்ளிட்ட, கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி மூலம் டெண்டர் கோருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில பொய் புகார்களை காரணம் காட்டி பதவியை விட்டு நீக்கி விடுவோம் என அலுவலர்கள் மிரட்டுவதாக கூறி கமுதிக்கு உள்பட்ட பகுதியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுத்து ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.