திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கே. கிருஷ்ணாபுரம், பணிக்கம்பட்டி, மாணிக்காபுரம், கரடிவாவி உள்ளிட்ட 19 இடங்களில் தார்ச்சாலை அமைத்தல், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுதல், ஆழ்துளைக் கிணறு அமைத்தல், அங்கன்வாடி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறவுள்ளது.
இதற்கான பூமி பூஜையினை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் சித்துராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், பல்லடம் யூனியன் கவுன்சிலர் மங்கையற்கரசி, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்ரியா, பல்லடம் ஒன்றிய சேர்மன் தேன்மொழி, துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.