ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடியாகவும், நீர் இருப்பு 32.80 டிஎம்சியாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3ஆம் தேதி 85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தற்போது 102 அடியை எட்டியுள்ளது.
இந்நிலையில், அணையில் 102 அடிக்கு அதிகமாக நீரைத் தேக்க இயலாத காரணத்தால், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 1500 கனஅடி உபரி நீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனால், பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்த அணை கட்டப்பட்டது முதல் 19ஆவது முறையாக 102 அடி வரை நீர் நிரம்பி, உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்ட விபரம் : நீர்மட்டம் 102 அடி, நீர் வரத்து 1927 கன அடி நீர், அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. நீர் இருப்பு 32.31 டிஎம்சியாக உள்ளது.