ETV Bharat / briefs

நீலகிரியில் தீவிர வாகன சோதனை: ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி! - Corona Vehicle Checkup

நீலகிரி: கரோனா‌ பரவலால் காவல் துறையினர், தொடர்ந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, நீலகிரியின் நிரந்தர முகவரி கொண்ட ஆதார் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, மாவட்டத்தில் வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

Other state, District Vehicle Checkup In Nilagiris

author img

By

Published : Jun 21, 2020, 10:51 PM IST

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜூன் 30ஆம் தேதி வரை, இப்பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில மாவட்டங்களில் ஒரே மண்டலத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் மற்ற மாவட்டத்திற்கும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பாலும்; நீலகிரி மாவட்டத்திற்குள் வெளி மாவட்ட மக்களும், சினிமா பிரபலங்களும் வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

குறிப்பாக கடந்த 13ஆம் தேதி முதல் நீலகிரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் சென்னையில் இருந்து வந்த நபர்களால் தொற்று அதிகரித்துள்ளது.

இதனையும் கருத்தில் கொண்டு இன்று(ஜூன் 21) முதல் மாவட்ட, உள் மாவட்ட எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, உதகை அருகே நகரின் நுழைவு வாயில் பகுதியான இந்து நகர்ப் பகுதியில் நகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள், காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வெளி மாநில, வெளி மாவட்ட வாகனங்களை தீவிர சோதனைக்குட்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்திற்குள் வருபவர்கள் உண்மையான இ-பாஸ் வைத்துள்ளனரா என்றும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களா என்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்படி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் கட்டாயம் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்; இல்லையெனில் அவர்களது வாகனம் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் யாரேனும் தங்கியுள்ளனரா என சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கை அடுத்த 14 நாள்கள் தொடரும் எனக் கூறப்படுகிறது. மேலும் முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.

அதேபோல் தகுந்த இடைவெளி இல்லாது செயல்படும் கடைகளுக்குச் சீல் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், ஆறு கடைகளுக்குச் சீல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மருத்துவமனையில் பணியாற்றிய காவலருக்கு கரோனா பாதிப்பு உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.