ETV Bharat / briefs

மறுஉடற்கூறாய்வு செய்யக் கோரிய வழக்கு : ஆட்சியர் மனுதாக்கல் செய்ய உத்தரவு!

author img

By

Published : Sep 25, 2020, 5:49 AM IST

மதுரை: இளைஞரின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்யக்கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madras High Court Madurai Branch youth dead body postmartam case

மதுரை பேரையூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் சாப்டூர் சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன், காவலர் புதிய ராஜா ஆகியோர் தொடர்ச்சியாக எங்கள் குடும்பத்தினரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை எனும் பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி எனது இளைய சகோதரர் ரமேஷை சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன், காவலர் புதிய ராஜா ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இரவு வீடு திரும்பி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், அதிகாலை எங்கள் வீட்டில் இருந்து 300 அடி தொலைவில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. காவல் துறையினர் சட்டவிரோதமாக அவரை அழைத்துச் சென்று தாக்கியதன் காரணமாக எனது சகோதரர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

பின்னர், மாலை 5.30 மணிக்கு மேலாக உடற்கூறாய்வு செய்யப்பட்டது. எனது சகோதரர் ரமேஷின் உடலை மதுரை, தேனி மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த மூத்த தடயவியல் துறையின் மூன்று பேராசிரியர்களைக் கொண்ட குழு, மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு, தாக்கப்பட்டே ரமேஷ் உயிரிழந்துள்ளார். நான்கு மணிக்கு மேலாக உடற்கூறாய்வு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. ஆகவே மறு உடற்கூறாய்வுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து அரசுத் தரப்பில், "ரமேஷின் சகோதர் மைனர் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். அது தொடர்பான விசாரணைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், அவர் வீட்டிற்கு அருகிலேயே தூக்குப் போட்டு உயிரிழந்துள்ளார். முழு உடற்கூறாய்வும் காணொலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.