திருவாரூரில் கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவாரூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட யாரும் உயிரிழக்கவில்லை. அனைவரும் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர். இது ஒரு மனநிறைவை தருகிறது.
சாத்தான்குளம் விவகாரத்தில் தந்தை-மகன் உயிரிழந்த நிகழ்வு என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட யாரும் தவறான தகவல்களை பரப்பி மக்களை பீதி அடைய செய்ய வேண்டாம்” என்றார்.