ETV Bharat / briefs

சீன பொருள்களுக்கு எதிராக ஓங்கும் குரல்: நிகழ்வை கைவிட்ட ஒப்போ!

author img

By

Published : Jun 19, 2020, 9:24 PM IST

சீன பொருள்கள் புறக்கணிப்புக்கு மக்கள் மத்தியில் அதிகம் ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்க, சீன நிறுவனமான ஒப்போ தன் புதிய திறன்பேசி அறிமுகப்படுத்தும் நேரலை நிகழ்வையே கைவிட்டு இருக்கிறது.

ஒப்போ
ஒப்போ

ஒப்போ நிறுவனம் தன் புதிய Find X2 ரக திறன்பேசியை 17 ஜூன் 2020 மாலை 4 மணிக்கு நேரலையில் அறிமுகப்படுத்தயிருந்த நிகழ்வை கைவிட்டிருப்பது இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்துக்கு, சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில், சீன பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரலும் வலுவாக எழுந்து கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர் விரைவில் தரமற்ற & விலை மலிவான பொருள்களை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தடுக்கப்படும். அதற்கான சட்டம் விரைவில் வரும் என, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்திருக்கிறார். அதோடு சீன பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்.

இப்படி சீன பொருள்கள் புறக்கணிப்புக்கு மக்கள் மத்தியில் அதிகம் ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்க, சீன நிறுவனமான ஒப்போவோ தன் புதிய திறன்பேசி அறிமுகப்படுத்தும் நேரலை நிகழ்வையே கைவிட்டு இருக்கிறது. ஒப்போ நிறுவனம் தன் புதிய Find X2 ரக திறன்பேசியை 17 ஜூன் 2020 மாலை 4 மணிக்கு நேரலையில் அறிமுகப்படுத்த இருந்தது.

ஆனால் திட்டமிட்ட படி, ஒப்போ தன் நிகழ்வை நடத்தவில்லை. அதற்கு மாறாக ஒரு 20 நிமிட காணொலியை பதிவேற்றம் செய்து இருக்கிறதாம். அதில், ஒப்பொ நிறுவனம், கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், இந்திய அலுவலர்களுக்கு எப்படி உதவியது என்பதையும் உள்ளே சேர்த்துச் சொல்லி இருக்கிறார்களாம்.

இந்தியாவின் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததில் இருந்து சீன பொருள்களை புறக்கணிப்பது தொடர்பான செய்திகள் நிறைய சமூக வலைதளங்களில் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஒப்போ தேவை இல்லாமல் எதையாவது செய்து, அது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டுவிடுவோ என்கிற அச்சத்தில் தனது நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்ககின்றன.

இந்தியாவின் கைப்பேசி சந்தையில், ஒப்போ போன்ற சீன நிறுவனங்களுக்கு அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா பயனாளர்களிடத்தில் ஒரு தனி இடம் இருக்கிறது. ஒப்போ, விவோ, ரியல் மீ, ஒன் ப்ளஸ், சியாமி என பல கைப்பேசி நிறுவனங்கள் இந்திய தகவல் சாதன சந்தையில் ஆழமாக கால்பதித்து இருக்கிறார்கள். இந்தியாவில் விற்பனை ஆகும் 10இல் 8 கைப்பேசிகள் சீன நிறுவனத்துக்குச் சொந்தமானவை என்பதும் இங்கு அழுத்தமாக குறிப்பிட வேண்டிய ஒன்று.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.