ETV Bharat / briefs

'ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் குறித்து விளம்பரம் செய்யவேண்டும்'- சென்னை உயர் நீதிமன்றம்! - ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழக்கு

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் குறித்து விளம்பரம் செய்யவேண்டும்'- சென்னை உயர் நீதிமன்றம்!
High court chennai
author img

By

Published : Aug 3, 2020, 8:43 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன் லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆன்லைன் வகுப்புக்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விதிமுறைகள் வகுக்க உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், விசாரணையை தள்ளிவைத்திருந்தது.

இந்த நிலையில், இன்று(ஆக.3) இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி, மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாட வேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

நாளொன்றுக்கு , ஒரு ஆசிரியர், ஆறு வகுப்புகளும், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளும் எடுக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த வேண்டும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது. 1 முதல் 8 வகுப்பு வரை 30 முதல் 45 நிமிடங்கள் 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

9 முதல் 12ஆம் வகுப்பு வரை , 30 முதல் 45 நிமிடங்களுக்கு 4 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வெறும் பரிந்துரை அடிப்படையில் இருப்பதாகவும், இதை அமல்படுத்த முடியாது எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசாணையை முழுமையாக படிக்காமல், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாகவும் தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஆன்லைன் வகுப்புகள் அனைத்து தரப்பு மாணவர்களும் பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதால், இந்த வழக்கில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர் சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ் பத்திரிகையில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், ஆன் லைன் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.