ETV Bharat / briefs

சொத்து தகராறில் கொலை மிரட்டல்: கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி! - Old Couple Suicide Attempt In Nagarcoil

கன்னியாகுமாரி: சொத்து தகராறு தொடர்பாக கொலை மிரட்டல் விடுத்தது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கணவன்-மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

Old Couple Suicide Attempt In Nagarcoil
Old Couple Suicide Attempt In Nagarcoil
author img

By

Published : Sep 22, 2020, 10:26 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மேலப்பெருவிளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி தாமராட்சி. முத்துசாமி அவரது வீட்டின் அருகில் உள்ள அலெக்ஸ் என்பவரின் சித்தப்பா நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டியுள்ளார்.

இதனால் முத்துசாமிக்கும், அலெக்சுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அலெக்ஸ், முத்துசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து முத்துசாமி ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், ஆசாரிபள்ளம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதுவரை காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், முத்துசாமியையும் அவரது மனைவியையும் கொலை செய்துவிடுவதாகவும் வீட்டை இரவோடு இரவாக இடித்து விடுவேன் என்றும் அலக்ஸ் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

இதனால், வேதனை அடைந்த முத்துசாமியும் அவரது மனைவி தாமராட்சியும் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது, அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.