தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பகிர்மானக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மின் தடை ஏற்படும் பகுதிகளாக தாம்பரம் மற்றும் சிட்லப்பாக்கம் பகுதிகளில், அவசர பராமரிப்புப் பணிகள் செய்ய வேண்டிய காரணத்தால் நாளை (06.06.2020) காலை 9 மணி முதல் நண்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சர்வமங்களா, சரஸ்வதி நகர், ஜோதி நகர் 1,2ஆவது தெரு, ராஜிவ் காந்தி தெரு, முத்துலட்சுமி தெரு, துரைச்சாமி நகர், ஆர்.ஆர்.நகர், சத்ரபதி சிவாஜி நகர், திரு.வி.க.நகர், அரிதாஸ்புரம் பிரதான சாலை ஆகியப் பகுதிகளில் பணிகள் முடிவடைந்த பின்னர், மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின் தடை செய்யப்படும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்றார் போல் தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ள மின் வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.