ETV Bharat / briefs

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா இல்லை - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

கோவை: சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கரோனா தொற்று கிடையாது என கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Jun 5, 2020, 5:28 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நபார்டு திட்டத்தின் மூலம் வால்பாறை சாலை முதல் ஜமீன் கோட்டாம்பட்டி வரை சுமார் 71 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள தார் சாலைக்கு பூமி பூஜை போடப்பட்டது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் ஜமீன் கோட்டாம்பட்டி, சூளேஸ்வரன் பட்டி, கொண்டே கவுண்டம்பாளையம் பகுதிகளில் கரோனா நிவாரணமாக காய்கறி அரிசி , மளிகை, பொருள்களை 2500 குடும்பங்களுக்கு வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், " வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வருபவர்களால் கரோனா தொற்று பரவுகிறது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல் இல்லை. கரோனா காலத்திலும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

சேலம் தலைவாசலில் அமையவுள்ள கால்நடை பூங்கா பணிகள் ஒரு மாத காலத்தில் முடிக்கப்பட்டு திறக்க உள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.