கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி 2ஆம் அனல்மின் நிலைத்தில் கொதிகலன் கடந்த ஒன்றாம் தேதி வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் 4, 5 ஆகிய தேதிகளில் சிகிச்சை பெற்று வந்த நிரந்திர ஊழியர் சிவக்குமார், ரவிச்சந்திரன், ஒப்பந்த ஊழியர் செல்வராஜ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நிரந்தர ஊழியர் ஜோதி ராமலிங்கம்(48), வைத்தியநாதன் (45), ஒப்பந்த ஊழியர் இளங்கோ(48), ஆனந்த பத்மநாதன் (44) ஆகிய நான்கு ஊழியர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று (ஜூலை12) சுரேஷ் (50) என்ற ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செல்போனை ஆன் செய்த மகள்; ஸ்வப்னாவை ஆஃப் செய்த என்ஐஏ!