நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கிராமப்புறங்களில் இருந்து அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தலின்படியும், குன்னூர் நகராட்சி ஆணையர் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, குன்னூர் பேருந்து நிலையத்தில் 10 ஆயிரம் ரூபாய் செலவில் அதிநவீன தானியங்கி கிருமிநாசினி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் இந்த இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். கிருமிநாசினியை பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:கரோனாவிலிருந்து எது நம்மை பாதுகாக்கும் - சோப்புகளா? கிருமிநாசினிகளா?