கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள என்எல்சி அனல் மின் நிலையத்தில் சுரங்கம் இரண்டில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில், ஜூலை 1ஆம் தேதி சுரங்கம் இரண்டில் உள்ள யூனிட் ஐந்தில் அமைந்திருக்கும் பாய்லர் திடீரென வெடித்தது.
அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலை 3ஆம் தேதி சிவக்குமார் என்ற பொறியாளர் உயிரிழந்தார்.
அவரைத் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த செல்வராஜ் என்ற ஒப்பந்தத் தொழிலாளர் மருத்துவமனையில் உயிரிழந்தார். நேற்று (ஜூலை 5) ரவிச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார். இதன்மூலம் என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.