ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். மும்பை அணியில் ஜெயந்த் யாதவிற்கு பதிலாக மிட்சல் மெக்லனகன் சேர்க்கப்பட்டுள்ளார். மறுமுனையில், சென்னை அணி டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய அதே 11 வீரர்களுடன் கொண்டே இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பரம எதிரகளான இவ்விரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையை வென்றுள்ளன. இதனால், எந்த அணி முதலில் நான்காவது முறையாக கோப்பையை தட்டிச் செல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணி மூன்றுமுறை சென்னை அணியை வீழ்த்தியுள்ளது. இதனால், மும்பை அணியின் ஆதிக்கம் தொடருமா, அல்லது நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தோடு விளையாடும் சென்னை அணி கோப்பையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இரு அணிகளின் ரசிகர்களும் உள்ளனர்.
மும்பை அணி விவரம்: ரோகித் ஷர்மா (கேப்டன்), டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பொல்லார்ட், பும்ரா, மலிங்கா, ராகுல் சஹார், மிட்சல் மெக்லனகன்
சென்னை அணி விவரம்: தோனி (கேப்டன்), வாட்சன், டு பிளசிஸ், ரெய்னா, ராயுடு, ஜடேஜா, பிராவோ, ஹர்பஜன் சிங், ஷர்துல் தாக்கூர், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர்