இந்தியாவில் கிரிக்கெட் திருவிழா என கொண்டாடப்படும், 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ஐபிஎல் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் டி காக், ஐந்தாவது ஓவரில் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் தந்து நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து, ரோகித் ஷர்மாவும், தீபக் சாஹரின் நக்கல் பந்தில் தோனியிடம் கேட்ச் தந்து பெவிலியன் திரும்பினார்.

இதன் மூலம், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்வதற்கு காரணமாக இருந்த விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் சாதனையை (கொல்கத்தா அணியின் கேப்டன்) சென்னை கேப்டன் தோனி முறியிடித்துள்ளார்.
அதிக விக்கெட்டுகள் வீழ்வதற்கு காரணமாக இருந்த விக்கெட்கீப்பர்கள் பட்டியல்:
- தோனி, சென்னை - 132 விக்கெட் (94 கேட்ச், 38 ஸ்டெம்பிங்)
- தினேஷ் கார்த்திக், கொல்கத்தா - 131 விக்கெட் (101 கேட்ச், 30 ஸ்டெம்பிங்)
- உத்தப்பா, கொல்கத்தா - 90 விக்கெட் (58 கேட்ச், 32 ஸ்டெம்பிங்)
- பார்திவ் படேல், பெங்களூரு - 82 விக்கெட் (66 கேட்ச், 16 ஸ்டெம்பிங்)