ETV Bharat / briefs

'மத்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டத்தை எதிர்க்க வேண்டும்'- எம் பி ஜோதிமணி! - கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

கரூர்: மத்திய அரசு கொண்டுவரவுள்ள சுற்றுச்சூழல் சட்டத்தை பொதுமக்கள் எதிர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.

'மத்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டத்தை மக்கள் எதிர்க்க வேண்டும்'- எம் பி ஜோதிமணி!
Mp Jothimani speak about environment law
author img

By

Published : Jul 27, 2020, 7:19 PM IST

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியணை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார். அவருடன் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி கூறுகையில், “மத்திய அரசுக்கு எதிராக திட்டங்களை வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

இத்திட்டமானது எங்கு தொழில் தொடங்கப்படுகிறதோ, அங்கே ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மக்களுக்குத் தான் ஏற்படும். அதனை நீதிமன்றத்தின் வாயிலாகவோ அல்லது அரசிடம் எடுத்துக் கூறவும் எல்லா உரிமையும் மக்களுக்கு இருக்கிறது.

ஆனால் தற்போது வரவுள்ள சுற்றுச்சூழல் 2020 திருத்தச் சட்டமானது, மக்களுக்கு எதிரானது, இதனை அனைவரும் ஏற்கக் கூடாது. இந்தச் சட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது" எனக் கூறினார்.

மேலும், "தொழில் வளர்ச்சி நாட்டிற்குத் தேவை. ஆனால் மணல், சுற்றுச் சூழலுக்கு எதிராக கனிமங்களை பாதித்து, தொழில் தொடங்குவதை தவிர்க்க வேண்டும். ஆகையால், உடனடியாக மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.