ETV Bharat / briefs

ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வங்கதேசம் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்று சாதனை படைத்தது.

வங்கதேசம் சாதனை
author img

By

Published : May 19, 2019, 2:39 PM IST

வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகள் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இந்நிலையில், டுப்லின் நகரில் நேற்று நடைபெற்ற தொடரின் கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் மொர்டாசா முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்களை எடுத்த போது மழை பெய்தது.

அந்த அணியில் ஷாய் ஹோப் 62 ரன்களிலும், அம்பிரிஸ் 59 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து, மழை நின்ற பின் ஆட்டம் 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்திருந்தது.

Hossain
மொசடக் ஹொசைன்

இதையடுத்து, டக்வொர்த் லூவிஸ் முறையில் வங்கதேச அணிக்கு 24 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்தாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 210 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்தது. அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவரில் 27 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஃபெபின் ஆலன் வீசிய 22ஆவது ஓவரை எதிர்கொண்ட மொசடக் ஹொசைன் 25 ரன்களை விளாசினார். இதனால், வங்கதேச அணி 22. 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 213 ரன்களை எட்டியது.

இதன் மூலம், வங்கதேசம் அணி இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல்முறையாக சர்வதேச பன்னாட்டுத் தொடரை வென்று சாதனை படைத்தது. இப்போட்டியில் 24 பந்துகளில் 52 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த வங்கதேச வீரர் மொசடக் ஹொசைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரில் ஐந்து போட்டிகளில் இரண்டு சதம், இரண்டு அரைசதம் என 470 ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.