சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினரை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி பழையபேட்டையில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகுந்த இடைவெளியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.