நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சந்திரபாடி, சின்னூர்பேட்டை ஆகிய மீனவ கிராமத்தில் 30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சின்னூர்பேட்டை மீனவ கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி மேம்பாட்டு விரிவாக்கத் திட்ட நிதியின் கீழ், ரூ.15லட்சத்து 47ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக இரண்டு கூடுதல் புதிய வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கும், அதேப்போல், சந்திரபாடி மீனவ கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட நிதியின் கீழ் ரூபாய் 14 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் மீனவ கிராம மக்கள் பயன்பாட்டிற்கு பொது விநியோக அங்காடி கட்டடம் கட்டுவதற்கும், பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணியைத் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், மீனவ பஞ்சாயத்தார்கள், கிராம மக்கள், அதிமுக நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு பிழைக்காது' - நீதிபதிகள் வேதனை