கன்னியாகுமரி மாவட்ட அனைத்து கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "குமரி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு, குறு வியாபாரிகள், வியாபாரிகளின் குடும்பத்தினர் என பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளின் நலனைக் கருத்தில்கொண்டு கன்னியாகுமரி சுற்றுலாத் தலத்தில் உள்ள தேவசம்போர்டு கடைகள், சிறப்பு நிலை நகராட்சி கடைகளுக்கு ஊரடங்கு முடியும் வரை வாடகை, மின் கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இதுபோல வங்கியில் நாங்கள் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டி கட்ட கால அவகாசம் வழங்குவதுடன், எங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக வங்கியில் வட்டி இல்லா கடன் உதவி செய்துதர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.