தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்ததை அடுத்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஜூலை 12) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர், கிராமப் பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
அத்தியாவசிய கடைகளான மருந்துக் கடைகள் போன்றவை இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள போதும், விருதுநகர் மாவட்ட மருந்துக் கடைகள் சங்கத்தின் சார்பில் முழு ஊரடங்கில் பங்கேற்கும் வகையில் அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டன.
இது குறித்து மருந்துக் கடை சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கின் பொழுது மருந்து வாங்க செல்வதாகக் கூறி சிலர் வெளியே சுற்றி வருவதால், தொடர்ந்து தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
அதை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமையான இன்று மருந்துக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளையும் அடைத்து முழு ஊரடங்கிற்கு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்போரூர் துப்பாக்கிச் சூடு: திமுக எம்எல்ஏ இதயவர்மன் கைது