திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 265ஆக உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் மாற்றுத்திறனாளிகள் கூட்டமாக நின்று மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாகினர்.
மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களும் மாற்றுத்திறனாளிகளிடம் எந்த ஒரு அறிவுரையும் சொல்லாமல் பரிசோதனை மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், அங்கு தற்போது கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதன் காரணமாக தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!