திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று மிக வேகமாகப் பரவி பல உயிர்களை காவு வாங்கி வருகின்றது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் சில விதிமுறைகளுக்கு உள்பட்டு சில கடைகள் மட்டும் செயல்பட்ட அனுமதித்துள்ளது.
இதில், இறைச்சி கடைக்கு அனுமதி இல்லை. ஆனால் அரசு உத்தரவை மீறி ஆட்டிறைச்சி, மீன்கள் விற்பனை செய்யபட்டு வந்தது. இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ராஜ் இரத்தினத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் இரண்டு கடைகளுக்கு அதிரடியாக சீல் வைக்க உத்தரவிட்டார். அது மட்டுமின்றி அரசு உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: பணியாள்களை ஏற்றிவந்த வேன் விபத்து: 19 பேர் படுகாயம்!