நாளை மறுநாள் இங்கிலாந்தில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடங்கவுள்ள நிலையில், தற்போது பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 9ஆவது பயிற்சிப் போட்டி, பிரிஸ்டோல் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து 421 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மாட் ஹென்ரி இப்போட்டியில் 9 ஓவர்களை வீசியுள்ளார். அதில், 107 ரன்களை வாரிவழங்கி ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார்.
குறிப்பாக, இவர் 47ஆவது ஓவரில் மட்டும் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களை தந்தார். இதனால், பயிற்சிப் போட்டியிலேயே சதம் விளாசிய பந்துவீச்சாளர் ஹென்ரி என ரசிகர்கள் இணையதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.