ETV Bharat / briefs

மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு: தாய்மார்கள் மனு! - Maternity Financing Scheme

தேனி: மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு

author img

By

Published : Oct 5, 2020, 7:07 PM IST

தமிழ்நாடு அரசால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு நிதி வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று (அக். 05) கைக்குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் இவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் நின்று முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த பெண்களுக்கு முதற்கட்டமாக அளிக்கப்படும் ரூ.4,000 மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட பெண்கள், மீதமுள்ள தொகையான ரூ.14,000 குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு மேலாகியும் தற்போது வரை தரவில்லை என்கின்றனர்.

இது தொடர்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களிடம் கேட்டும் அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் மகப்பேறு திட்ட நிதி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டதற்கு அவர்களது வங்கிக் கணக்கில் உதவித்தொகை முழுவதும் வரவு வைக்கப்பட்டது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

எனவே மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கண்டமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள்பட்ட மேலப்பட்டி துணை சுகாதார நிலைய செவிலி கல்பனா என்பவர் மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் ரூ.2.96 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தற்போது மாவட்டத்தின் பிற பகுதிகளான அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தாய்மார்களும் புகார் தெரிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.