இது தொடர்பாக மாருதி சுசுகி இந்தியா (எம்.எஸ்.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா (எம்.எஸ்.ஐ) தான் இந்தியாவிலேயே முதல்முதலில், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ரயில்கள் மூலமாக தளவாடம் செய்துவருகிறது.
டபுள் டெக்கர் நெகிழ்வு-டெக் ரேக்குகள் கொண்ட ரயில்கள் மூலமாக மாருதி சுசுகி நிறுவனம் உற்பத்தி செய்த வாகனங்களை தளவாடம் செய்து வருகிறது.
அந்த வகையில், எங்கள் நிறுவனம் கிட்டத்தட்ட 3,000 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுத்திருக்கிறது. மேலும், இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகளின் பயணத்தை நிறுவனம் தவிர்த்திருப்பதன் மூலமாக 100 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருள் ஆற்றல் சேமிக்கப்பட்டது.
கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் ஏறத்தாழ 1.78 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் ரயில்கள் மூலமாக நாடு முழுவதும் அனுப்பப்பட்டன. இது முந்தைய ஆண்டை விட 15 % அதிகம். இது ஆண்டின் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 12% ஆகும்" என குறிப்பிட்டுள்ளது.
எம்.எஸ்.ஐ நிறுவனத்தின் நிர்வாக மேலாளரும், தலைமை நிர்வாக அலுவலருமான கெனிச்சி அயுகாவா கூறுகையில்," கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (சி.ஏ.ஜி.ஆர்) 18 சதவீதத்திற்கும் அதிகமாகக் கண்டது.
அதிகரித்து வரும் கார்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, எங்கள் குழு பெரிய அளவிலான தளவாட ஓட்டத்தின் அவசியத்தை உணர்ந்தது. உற்பத்தி விரிவாக்கத்திற்கு மட்டுமல்ல, அதன் போக்குவரத்தால் ஏற்படும் இடரையும் நாங்கள் உணர்ந்தோம். சாலை வழி தளவாடங்களுக்கு அப்பால் பார்க்க வேண்டும்.
125 கார்களைக் கையாளும் திறன் கொண்ட ஒற்றை-டெக் வேகன்களுடன் நாங்கள் இந்த முயற்சியைத் தொடங்கினோம். பின்னர் இது 265 கார்களின் கொள்ளளவு கொண்ட டபுள் டெக்கர் ரேக்குகளுக்கு மாற்றப்பட்டது. இன்று வரை 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்கள் இந்த ரேக்குகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் இப்போது 27 ரேக்குகளை மணிக்கு 95 கிமீ வேகத்தில் இயக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரேக்கும் 318 கார்களுக்கு இடமளிக்கும் திறன் கொண்டது. ஆட்டோமொபைல் சரக்கு ரயில் ஆபரேட்டர் (AFTO) உரிமத்தைப் பெற்ற நாட்டின் முதல் வாகன உற்பத்தியாளர் எங்கள் நிறுவனம் தான்.
இது தனியார் நிறுவனங்கள் இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் அதிவேக, அதிக திறன் கொண்ட ஆட்டோ வேகன் ரேக்குகளை பயன்படுத்தும் ஒரே நிறுவனம் எம்.எஸ்.ஐ தான்.
தற்போது, எம்.எஸ்.ஐ நிறுவனம் குருகிராம், ஃபாரூக்நகர், கத்துவாஸ், பட்லி, டெட்ரோஜண்ட் ஆகிய ஐந்து ஏற்றுதல் முனையங்களையும், பெங்களூரு, நாக்பூர், மும்பை, குவஹாத்தி, முந்த்ரா துறைமுகம், இந்தூர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத், என்.சி.ஆர். அகர்தலா, எம்.எஸ்.ஐ. அகர்தலா ஆகிய 13 இலக்கு முனையங்களையும் பயன்படுத்துகிறது.
ரயில் பயன்முறையின் அணுகல் இப்போது வடகிழக்கு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது மாநிலங்களுக்கான போக்குவரத்து நேரத்தை கிட்டத்தட்ட பாதியாக குறைக்க உதவுகிறது" என்றார்.