ETV Bharat / briefs

கல்லணை அருகே ஆண் சடலம் மீட்பு - காவல் துறை விசாரணை - தஞ்சாவூரில் ஆண் சடலம் மீட்பு

தஞ்சாவூர்: கல்லணை அருகே அடையாளம் தெரியாத ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது.ஆவ

Male Dead Body Recovered In Kallanai
Male Dead Body Recovered In Kallanai
author img

By

Published : Aug 14, 2020, 4:02 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அருகே கரை மேல் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே காவிரிக்கரையின் ஓரத்தில் ஓர் ஆண் சடலம் கிடந்துள்ளது.

இதைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் குணவதியிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் குணவதி தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்தது யார் எங்கிருந்து வந்தார். ஆற்றில் அடித்து வரப்பட்டாரா அல்லது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இங்கு வந்து போட்டுவிட்டு சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.