ETV Bharat / briefs

முன்னாள் ஐஜியின் சொத்துகளை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு - காவல் கமிஷனர் ஜெகநாதன் சொத்துக்குவிப்பு வழக்கு

மதுரை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் ஐஜி ஜெகநாதனின் குடும்ப சொத்துகளை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

High Court Madurai bench orders to confiscate assets of Late GG Jagannathan

author img

By

Published : Jun 24, 2020, 1:29 AM IST

சேலம் சரக டிஐஜி ஆக இருந்தவர் ஜெகநாதன். இவர் கடந்த 22. 01 .1997 முதல் 27 .05 .2000 வரை சேலம் மாநகர காவல் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகித்தார். கடந்த 30 .06. 2001இல் ஓய்வு பெற்ற பிறகு மனித உரிமை ஆணையத்தில் ஐஜியாக பணியாற்றினார்.

கடந்த 01.01.1998 முதல் 30. 06. 2001 வரையிலான காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 33 லட்சத்து 58 ஆயிரத்து 490 மதிப்பிற்கு சொத்து சேர்த்ததாக இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த 2012இல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வழக்கை விசாரித்த மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம், ஜெகநாதனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து ஜெகநாதன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். மனு நிலுவையில் இருந்த காலத்தில் ஜெகநாதன் இறந்தார் .

இதையடுத்து அவரது மனைவி லீலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஜெகநாதன் இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை நிறைவேற்ற முடியாது. எனவே அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.