ETV Bharat / briefs

மீண்டும் இணைந்த விக்ரம் வேதா பட ஜோடி!

author img

By

Published : Jun 5, 2020, 7:49 PM IST

மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் விக்ரம் வேதா திரைப்படத்தை தொடர்ந்து, ஒரு புதிய திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Madhavan
Madhavan

நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சைலன்ஸ்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதற்கிடையில், அவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்வுடன் இணைந்து, ‘மாறா’ முடித்துள்ளார். இதுகுறித்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "மாதவன்‌ மற்றும்‌ ஷ்ரத்தா ஸ்ரீநாத்‌ நடிப்பில்‌ எங்கள்‌ தயாரிப்பில்‌ உருவாகியுள்ள 'மாறா' திரைப்படத்தின்‌ படப்பிடிப்பு ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பே முடிவடைந்துவிட்டது என்பதை மிக மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்து கொள்கிறோம்‌. விரைவில்‌ படத்தின்‌ போஸ்ட்‌ ப்ரொடக்ஷ்ன் பணிகள்‌ துவங்கவுள்ளன.

அரசு அறிவுறுத்தியுள்ளது போல் பாதுகாப்பு விதிகள்‌ அனைத்தும்‌ கடைப்பிடிக்கப்பட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷ்ன்‌‌ பணிகள்‌ நடத்த திட்டமிட்டுள்ளோம். தாமரை பாடல் வரி எழுத, இசை அமைப்பாளராக ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நெட்‌ ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி பலரது பாராட்டையும்‌ பெற்ற “கல்கி” திரைப்படத்தின் இயக்குநர்‌ திலீப்‌ குமார்‌ இப்படத்தை இயக்குகிறார்‌. அனைவரையும் ஆச்சர்யத்தில்‌ ஆழ்த்தும்‌ வகையில்,‌ மிகப்பெரும்‌ தமிழ்‌ சினிமா ஆளுமைகள்‌ இப்படத்தின்‌ நடிப்பு மற்றும்‌ தொழில்‌ நுட்ப குழுவில்‌ பணியாற்றியுள்ளனர்‌. விரைவில்‌ இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.