கரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மதுபானக் கடைகளில் தகுந்த இடைவெளியை பின்பற்றி மதுபானம் வாங்கிச் செல்ல வேண்டும், மதுபானக் கூடங்கள் செயல்படக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் அரசு அனுமதியை மீறி மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றது. தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் குடிமகன்கள் மதுபானக் கூடத்தில் கூடுகின்றனர்.
இதேபோல், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. பெரும்பாலான மதுபானக் கூடங்கள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.
முக்கியமாக பழைய பேருந்து நிலையம் தாராபுரம் சாலை, கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மதுபானக் கடைகளில் மதுபானக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 120 ஆக இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 200 நெருங்கி வருகின்ற நிலையில் இது போன்ற மதுபானக் கூடங்களில் குடிமகன்கள் கூடுவதால் மேலும் கரோனா பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: பின்னலாடைத்துறையில் சீனாவை விஞ்சுமா இந்தியா?