ETV Bharat / briefs

யானை மரணம்: வீண்பழி சுமத்துவதாக மேனகா காந்தி மீது புகார் - Elephant death case in Malappuram

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தி மீது மலப்புரம் மாவட்டமும், அங்கு வசிப்பவர்களுக்கும் எதிராக வெறுப்பு பரப்புரையில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் என்பவர் மலப்புரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

menaka gandhi
menaka gandhi
author img

By

Published : Jun 5, 2020, 7:33 PM IST

மலப்புரம் (கேரளா): யானை கொல்லப்பட்டது தொடர்பாக மலப்புரம் மாவட்டமும், அங்கு வசிப்பவர்களுக்கும் எதிராக வெறுப்பு பரப்புரையில் ஈடுபட்டதாக பாஜக தலைவர் மேனகா காந்தி மீதும், அவர் சார்ந்த கட்சியினர் பலர் மீதும் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் மலப்புரம் காவல் கண்காணிப்பாளரிடத்தில் புகார் அளித்துள்ளார்.

துரதிஷ்டவசமாக யானை இறந்ததற்கு, இங்கு வசிக்கும் மக்கள் மீதும், அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீதும் மேனகா காந்தி அபாண்டமாக பழிசுமத்தி பேசி வருகிறார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடத்தில், மலப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.

மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணி பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழத்தை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப்பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானையின் தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதநடைந்தன.

இந்த சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றுத்திரிந்த பெண் யானை, வெள்ளியாறு ஆற்றில் நின்றநிலையில் மே 27ஆம் தேதி உயிரிழந்தது. அந்த பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறாய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இந்தக் கொடூர நிகழ்வுக்கு பல்வேறு பிரபலங்கள் தரப்பிலும் மக்கள் மத்தியிலும் கடும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படைைய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அமைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த கொடூர சம்பவம் குறித்து முழுமையான அறிக்கையையும் கேரள அரசிடம் இருந்து மத்திய அரசு கோரியுள்ளது.

இச்சூழலில் வனவிலங்கு ஆர்வலரும், பாஜக மூத்தத் தலைவருமான மேனகா காந்தி நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார். மலப்புரம் வயநாடு தொகுதிக்குள்தானே வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் வினவிலங்கு வேட்டையாடுபவர்கள் அதிகரி்த்து வரும் நிலையில் அதைத் தீர்க்க ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார். வெறும் பேச்சில் மட்டும் ஆர்வம் காட்டாமல் ராகுல் காந்தி இதுபோன்ற பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும்.

இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று கேரள வனத்துறைச் செயலாளரை நீக்க வேண்டும், அமைச்சரையும் நீக்க வேண்டும். யானைகள் இதுபோல் கொல்லப்படுவது குறித்து ஆறாயிரம் பக்கத்தில் எங்கள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம்.

அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதுவரை 11 ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன, உச்ச நீதிமன்றத்தில் எங்கள் வழக்கு முடியும் முன் இன்னும் எத்தனை யானைகள் கொல்லப்பட போகின்றனவோ தெரியவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மேனகா காந்தி கேரள அரசு உயர் அலுவலர்களுக்கு கடிதம் எழுதி அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அதில் “கேரள வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை யானைகள் கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் உள்ள கோயில்களிலும், தனியார் தரப்பிலும் யானைகளின் கால்களை உடைத்தும், நகங்களைப் பிடுங்கியும், பட்டினிபோட்டும் இதுவரை 600 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

சமீபத்தில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சலகுடாவில் உள்ள கூடல்மணியகம் கோயிலில் ஒரு யானை கட்டிப்போடப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு இதுவரை நடவடிக்கை இல்லை. கேரள மாநிலத்திலேயே மலப்புரம் மாவட்டத்தில்தான் வனவிலங்குகளுக்கு எதிராக அதிகமான கொடுஞ்செயல்கள் நடக்கின்றன. ஆனால் இதுவரை யார்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.