டெல்லி: ஐஓஎஸ் 13 பதிப்பு பயன்படுத்தும் ஆப்பிள் பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் இருக்கையை நண்பர்களிடத்தில் இருந்து மறைக்கும் தந்திரம் உள்ளது.
நாம் ஆன்லைனில் இருப்பதை மறைப்பதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் செயலி இதுவரை பயனர்களுக்கு தரவில்லை. ஐபோன் பயனாளர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும்.
செயல்படுத்தும் முறை:
- ஐபோன் - இல் வாட்ஸ்அப் தகவல் அறிவிப்பு பலகையில் வரும் வரை காத்திருக்கவும்.
- அதனைக் கிளிக் செய்து, முழு தகவலும் திரையில் தெரியும்படி மாற்றவேண்டும்
- செயலியில் உள் நுழையாமலேயே, அந்த முழு தகவலையும் நம்மால் படிக்க முடியும்
- அதனை அனுப்பியவருக்கு நாம் ஆன்லைனில் இருப்பதோ அல்லது அந்த செய்தியை படித்ததற்கான ப்ளூ டிக்ஸ் காட்டப்பட மாட்டாது
என்னதான் வாட்ஸ் அப்பில் கடைசியாக செயலி பயன்படுத்தியதை மறைக்கும் அம்சங்கள் இருந்தாலும், பயனர்கள் ஆன்லைன் வரும்போது அவர்களது நண்பர்கள் எளிதில் அதனை தெரிந்துகொள்ள முடியும் என்பதுதான் உண்மை. ஆனால் தற்போது ஐஓஎஸ் 13 பதிப்பின் மூலம் ஆப்பிள் பயனர்கள், நண்பர்களுக்கு தெரியாமல் அவர்கள் அனுப்பிய தகவல்களை படிக்க முடியும்.