ETV Bharat / briefs

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் மருதையாறு அணை -  விவசாயிகள் மகிழ்ச்சி! - குடிமராமத்து பணிகள்

பெரம்பலூர்: குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் மருதையாறு அணைக்கட்டு சீரமைக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி
குடிமராமத்து பணிகள்
author img

By

Published : Jun 27, 2020, 5:15 PM IST

விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம். வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகளவில் நடைபெறுகிறது. பருத்தி, மக்காச்சோளம், சின்ன வெங்காயம் உள்ளிட்டவைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் செல்லியம்பாளையம், கீழக்கணவாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து உற்பத்தியாகும் மருதையாறு, பெரம்பலூர் மாவட்டம் வழியாக அரியலூர் மாவட்டம் கொள்ளிடத்தில் வீணாக சென்று கலந்தது. இந்த நீரை பெரம்பலூர் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில், 1983ஆம் ஆண்டு விளாமுத்தூர் பகுதியில் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு சீரமைக்கப்படாமல் இருந்ததால், இதனை விவசாயிகள் சீரமைக்கக் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விளாமுத்தூர் அணைக்கட்டு பகுதியானது 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வரத்து வாய்க்கால்கள், மதகுகள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த அணைக்கட்டு சீரமைக்கப்பட்டு தேங்கும் நீர், துறைமங்கலம் ஏரிக்குச் செல்லும். மேலும் இந்த அணைக்கட்டு சீரமைக்கப்படுவதன் மூலம் நொச்சியம், விளாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:’அஞ்சு வருசமா டேங்க் மட்டும்தான் இருக்கு... குடிக்கத் தண்ணீர் இல்ல’ : ஏமப்பூரில் அவலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.