சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டுவந்த கோவை-அரக்கோணம் சிறப்பு ரயில், கோவை-காட்பாடி சிறப்பு ரயில், கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயில் ஆகியவை நாளை (ஜூன் 29) முதல் அடுத்த மாதம் ஜூலை 15ஆம் தேதிவரை ரத்துசெய்யப்படுகின்றன.
இதேபோல் திருச்சி-செங்கல்பட்டு, மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டுவந்த ரயில்களும் ரத்துசெய்யப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கான முழுக் கட்டணத்தை பயண தேதி முதல், ஆறு மாதங்களுக்குள் சிறப்பு கவுன்டர்களில் பெற்றுக்கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் இருந்து செல்லும் சிறப்பு ரயில்கள் ஜூலை 15ஆம் தேதி வரை ரத்து