ETV Bharat / briefs

கோலியையும் என்ன மாதிரி ஆக்கிடாதீங்க - சச்சின் அட்வைஸ் - WorldCup

விராட் கோலி மட்டும் அணியில் சிறப்பாக விளையாடினால், இந்திய அணியால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கோலி - சச்சின்
author img

By

Published : May 23, 2019, 6:38 AM IST

இது குறித்து அவர் கூறுகையில்,

"அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே போட்டியில் வெற்றிபெற முடியும். தனி ஒரு வீரரின் ஆட்டத்தை சார்ந்து இருந்தால் உலகக் கோப்பை போன்ற தொடரில் வெற்றிபெற முடியாது. மற்ற வீரர்களும் போட்டியில் தங்களது பங்களிப்பை தர வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்திய அணிக்கு இறுதியில் ஏமாற்றமும், தோல்வியும் மட்டுமே மிஞ்சும்.

என்னை பொறுத்த வரையில், நான்காவது வரிசை என்பது வெறும் எண் மட்டுமே. நான்கு, ஐந்து, ஆறு ஆகிய வரிசையில் பேட்டிங் செய்ய நமது அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஏராளமானோர் உள்ளனர். இருப்பினும், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதுதான் முக்கியம்" என்றார்.

மற்ற வீரர்கள் கைகொடுக்காததால், 1996, 1999,2003 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் தனக்கு ஏற்பட்ட நிலைதான் விராட் கோலிக்கு ஏற்பட்டுவிடும் என சச்சின் மறைமுகாக தெரிவித்துள்ளார். அவர் கூறியது நிதர்சனமான உண்மை என்பது கிரிக்கெட் வல்லுநர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தப்படியாக அதிக சதம் விளாசிய வீரர் என்ற பெருமயை விராட் கோலி பெற்றுள்ளார்.

12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்குவதற்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி நேற்று இங்கிலாந்துக்கு சென்றது.

இந்திய அணி இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் ஜூன் 5ஆம் தேதி மோதுகிறது. இப்போட்டி சவுத்ஹாம்டன் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனிடையே, இந்திய அணி நாளை மறுநாள் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.

kohli
விராட் கோலி

பொதுவாக, விராட் கோலியின் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். ஆனால் இம்முறை கேப்டன் என்ற பொறுப்பில் அணியை வழிநடத்தவுள்ளதால், கேப்டன்ஷிப், பேட்டிங் என இரண்டிலும் அவர் சாதிப்பாரா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Intro:Body:

sachin

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.