திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்து வடமதுரை கூத்தம்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி என்பவர் கம்பிளியம்பட்டி கூத்தம்பட்டி பகுதிகளில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், வடமதுரை காவல்துறை ஆய்வாளர் உத்தரவின் பெயரில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான காவலர்கள் வடமதுரை, கம்பிளியம்பட்டி, கூத்தாம்பட்டி பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்
அப்போது, துரைசாமி அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கேரள லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட கேரள லாட்டரிச் சீட்டுகள், ரூ.4,700 ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.