கவாசாகி நோய் முதன் முறையாக 1967ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் கவாசாகி என்பவரால் முதன் முறையாகக் கண்டறிப்பட்டது.
இந்த நோய் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை மட்டுமே தாக்கும் என்றும், கடுமையான காய்ச்சல், தோலில் பாதிப்பு ஏற்படுவதுடன், ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும், என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கரூர் நகராட்சிக்கு உள்பட்ட தாந்தோன்றிமலை காந்தி நகரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரது ஒன்றரை வயது மகன் ஹரீஸ் என்ற குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தையின் பெற்றோர் கரோனா தொற்று என நினைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் குழந்தைக்கு அங்கு காய்ச்சல் சரியாக வராததால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கவாசாகி நோய் என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொண்டனர்.
முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் ரூபாய் செலவில் குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணம் அடைந்துள்ளார். இன்னும் இரு தினங்களில் சிறுவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாலும் ஆறு மாத காலம் தொடர் கண்காணிக்கப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.