உலகளவில் சீனா வர்த்தகம், பல்வேறு விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் இருந்துவருகிறது.
இந்நிலையில், சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும், சீன பொருள்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் சீன கொடி எரிப்பு போரட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஐந்து நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், இக்கட்சியினர் போராட்டத்தின் போது சீன கொடியை எரித்தது மட்டுமல்லாமல் சீனப் பொருள்களை அடித்து உடைத்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.