புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது23). இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கேபிள் டிவி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் .
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் கேபிள் வேலை பார்த்துள்ளார்.
அப்போது, வயரை இழுத்து பிடிப்பதற்காக அதே வணிக வளாகத்தில் வசிக்கும் ஒரே வீட்டை சேர்ந்த 8 வயது பெண் மற்றும் 10 வயது ஆண் குழந்தையை உதவிக்கு அழைத்துள்ளார்.
இருவரையும் மாடிக்கு அழைத்துச் சென்ற ரகுபதி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
பின்னர் 10 வயது ஆண் குழந்தை வீட்டில் உள்ளவர்களிடம் கூறியதையடுத்து வணிக வளா உள்ளவர்கள் ரகுபதியை பிடித்து அடித்து புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, காவல் துறையினர் ரகுபதி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி மருத்துவர் சத்யா எட்டு வயது பெண் மற்றும் 10 வயது ஆண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக குற்றவாளி ரகுபதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.